Coimbatore Blog

Coimbatore News

Share

திருமணத்தில் கவனிக்க வேண்டிய பொருத்தங்கள்

திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண பொருத்தம்

இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை :

தினப்பொருத்தம்
கனபோருத்தம்
யோனிப்போருத்தம்
ராசிப்போருத்தம்
ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.
ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ரஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

12 வகையான திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது ஏன் ?

ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக, செழிப்பாக, அன்னியோன்யமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
12 பொருத்தங்களை ஜோதிடர் சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டு அல்லது இல்லை என ஜோதிடர்கள் கூறுவது வழக்கம்.
இதன் அடிப்படையிலேயே அப்படி பொருத்தம் பார்க்கப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் அடுத்த நிலைக்கு யோசிப்பது வழக்கம்.

இந்து மதத்தில் திருமணப் பொருத்தங்கள்

1.தினப் பொருத்தம்

இந்த பொருத்தம் மணமக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுவதால் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

2. கணப் பொருத்தம்

இது தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று கணங்களின் பொருத்தத்தைப் பார்ப்பதாகும். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களை 3 பிரிவாக பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இன்ன கணத்தில் பிறந்தவர்களை சேர்க்க வேண்டும் என முனிவர்கள் பொருத்தம் வகுத்துள்ளனர். ஒருவரின் குணநலம் எத்தனை முக்கியம் என்பதை நீங்களே அறிவீர்கள்.

3. மாகேந்திரப் பொருத்தம்

செழிப்பை கூறும் பொருளாதார வளத்தை குறிக்கும் பொருத்தம் ஆகும்.

4. ஸ்திரீ தீர்க்கம்

மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படுவது ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.

5. யோனிப் பொருத்தம்

இது திருமணத்திற்கு பின் மணமக்களின் உடல் தேவையை எந்த வகையில் பூர்த்தி செய்து கொள்வார்கள். இருவருக்கும் இதில் முரண்பாடு ஏற்படாமல் இருக்க யோனி பொருத்தம் பார்க்கப்படுகின்றது.
உடல் இன்பத்தால் உலகம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு திருமண ஆசை இல்லை என்றால் அவன் அப்படியே அடுத்த நிலைக்கு செல்ல விரும்பாதவனாக இருக்க நேரிடலாம். திருமணம் அடுத்த நிலைக்கு செல்ல தூண்டுகின்றது. திருமணத்தில் இணையும் மணங்கள், உடல் இன்பத்திலும் களித்தால் வாழ்நால் மிகச்சிறப்பாக அமையும்.
சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பர்.

6.இராசிப் பொருத்தம்

இது தலைமுறை விருத்தி செய்வதற்காக பார்க்கப்படும் முக்கிய பொருத்தம் ஆகும்.

7.இராசி அதிபதி பொருத்தம்

சந்ததி விருத்திக்காகவும், தம்பதிகள் இணக்கமாக வாழ வழி வகுக்க உதவும் பொருத்தம்.

8.வசியப் பொருத்தம்

மணமக்களின் நேச வாழ்விற்காக பார்க்கப்படும் பொருத்தம்.

9.ரஜ்ஜிப்பொருத்தம்

இந்த ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தல் கூடாது. வாழ்வின் உயிர்நாடியான, பிரயாணத்தில் தீமை ஏற்படுதல், பொருள் இழப்பு உள்ளிட்டவை நிகழும் என கூறப்படுகிறது. தீர்க்க சுமங்கலியாக வாழ இந்த பொருத்தம் அவசியமாக பார்க்கப்படுகின்றது.

10. வேதைப் பொருத்தம்

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.

11. நாடிப் பொருத்தம்

இந்த பொருத்தம் இருந்தால் தான் நம் வம்சம் விருத்தியாகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் என நம்பப்படுகின்றது.

12. விருட்சப் பொருத்தம்

விருட்ச பொருத்தம் என்பது பால் மரத்தை பொருத்து பார்க்கப்படுகின்றது. திருமணம் செய்ய உள்ள தம்பதிகளில் ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது பால் மரமாக இருந்தால் நல்லது.

ராசி அதிபதி பொருத்தம்

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ராசி அதிபதி உண்டு. மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் ஒரே ராசி அதிபதி என்றால் பொருத்தம் உண்டு. அல்லது இருவரின் ராசியும் நட்பு ராசி அதிபதியாக இருந்தால் பொருந்தும். இருவரின் ராசி அதிபதிகள் பகைமையுடன் இருத்தல் கூடாது.
Hits: 2462, Rating : ( 5 ) by 1 User(s).